மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அம்பேத்கருக்கு புகழஞ்சலி

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் அம்பேத்கருக்கு புகழஞ்சலி
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் அரசியலமைப்பு சட்டம் தந்த அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜவேலு ,முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஸ்வானா பர்வீன், மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீதிவிடங்கன், மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன், இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ,சிவதாஸ் துணை ஒருங்கிணைப்பாளர் அறிவொளி, விவேகானந்தன்,விஜயகுமார், மாயூரம் வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் பிரித் குமார், செயலாளர் கோபிநாத், பொருளாளர் ராஜாஜி உள்ளிட்ட வழக்கறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜவேலு, முதன்மை மாவட்ட உரிமையியல் நடுவர் ரிஸ்வானா பர்வீன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கான வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம சேயோன், மாயூரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வீதிவிடங்கன், மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குபேந்திரன் ஆகியோர் அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.