குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

குடியுரிமை மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 


 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கொண்டுவந்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி எம்எல்ஏ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார், நகர மாவட்ட துணைச் செயலாளர் அரங்க பாலகிருஷ்ணன், செயலாளர் தண்டபாணி, நகர மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் அன்சார் உதயநிதி ஸ்டாலின், பேரவை மாவட்ட பொருளாளர் தியாக இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, துணை செயலாளர் ராமு, ஆட்டோ பாண்டியன் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.