தலைவர் பதவியை அதிமுகவினர் விலைக்கு வாங்குவதாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

அதிகார பலம், பண பலம், படை பலத்தை வைத்து தலைவர் பதவியை அதிமுகவினர் விலைக்கு வாங்குவதாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி திண்டுக்கல்லில் குற்றச்சாட்டு.


திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் தலைவர் கே எஸ் அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் : மத்திய அரசு பாராளுமன்றத்தில் குடி உரிமை தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது இதை நடைமுறைப் படுத்தினால் இந்திய ஜனநாயக அடித்தளமே ஆட்டம் காணும் . பாஜக செய்த கெடுதல்களிலேயே மிகப்பெரிய கெடுதல்குடி உரிமை தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தது தான் இந்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவளித்து வாக்களித்தது என்பது வருந்தத்தக்கது தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் 5 லட்சம் பேர் உள்ளனர் அவர்களது நிலை ஆபத்தில் உள்ளது பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக
மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு இதுவரை வழங்க வில்லை. தமிழகத்திற்கும் இதுவரை வழங்கப்படவில்லை இதனை கேட்காமல் கைகட்டி கூனிக்குறுகி தமிழக அரசு உள்ளது சுயமரியாதை இல்லாத கட்சியாக அதிமுக செயல் பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரியை உயர்த்தினால் விலைவாசிகள் உயரும் பொது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.இந்தியாவில் அன்னிய முதலீடு என்பது கிடையாது முதலீடு இல்லாத காரணத்தினால் உள்நாட்டு முதலீடு செய்வதற்கும் தயங்குகின்றனர் முதலீடு இல்லாத தொழில் வளர்ச்சி கிடையாது வேலை வாய்ப்பு இல்லை பணப்புழக்கம் கிடையாது சந்தை விற்பனை கிடையாது உற்பத்தி கிடையாது
உற்பத்தி இல்லாததினால் பொருளாதாரம் என்பது வீழ்ச்சி அடைந்துள்ளது. மக்கள்
பங்கேற்க எந்த ஒரு தேர்தலும் மக்களாட்சியை கொண்டு வராது அதிகார பலம் ஆள் பலம் பண பலம் உள்ளவர்களுக்குத்தான் இது சாதகமாக அமையும் பண இவற்றுக்குப் பின்னால் அதிமுக அரசு உள்ளது அந்த ஏலத்தை நடத்தியவர் அண்ணா திமுகவை சேர்ந்தவர். உள்ளாட்சித் தேர்தல் வேண்டாம் என்று திமுக காங்கிரஸ் உட்பட எதிர்க் கட்சிகள் வழக்கு தொடரவில்லைமுறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகத் தான் நீதிமன்றம் சென்றுள்ளோம் இட ஒதுக்கீட்டை தமிழக தேர்தல் ஆணையம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை இட ஒதுக்கீடு வரைமுறை செய்யப்பட வேண்டும். குழப்பவாதி அண்ணா திமுக தான் திமுக கிடையாது ஜெயக்குமார் இதை புரிந்து கொள்ள வேண்டும்.