திருப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலில் யூஸ்மீ திரைப்படத்துவக்க விழா  


திருப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமி கோவிலில் யூஸ்மீ திரைப்படத்தின்  துவக்க விழா நடைபெற்றது.

 


 

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயில் வளாகத்தில் யூஸ்மீ  என்ற திரைப்படத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த புதிய படத்தின் பூமி பூஜை விழாவை ஆதிமூல சற்குரு வீரயோக வசந்தராயார்  மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் பூஜை செய்து ஆசிர்வாதம் செய்தார். இதில் பொள்ளாச்சி பூசாரிப்பட்டி ஸ்ரீ மகாமேடு சக்திபீடம் ஸ்ரீலஸ்ரீ சண்முக சுந்தர சுவாமிகள், கோவை ஸ்ரீ மத் தர்மராஜ அருள் பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கி, வாழ்த்தி பேசினர்.

 


 

இந்த நிகழ்ச்சியில் வத்தலகுண்டு கரட்டுப்பட்டி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ் ஆறுமுகம், கோவை, திருப்பூர், நீலகிரி ஏ ஆர் ஆர் குரூப் எம்.கே.விஜயகுமார், திருஞானசம்பந்தர் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயராணி, திருப்பூர் எம்.எஸ் கிரீன் எஜுகேஷன் தமிழ் உளி முருகேசன், ஜே கே ஆர் கார்மெண்ட்ஸ் ஜெய்லானி, சிவகாசி சித்தர்கள் ஆராய்ச்சியாளர் ஐயங்கரன், பொள்ளாச்சி பிரபுராம்,பல்லடம் வனம் அமைப்பின் தலைவர் டி.எம்.எஸ். பழனிசாமி, ஈஸ்வரமூர்த்தி, முருகேசன், சேலம் ஷேக் முகைதீன், மேஜிக் யோனா, நமது பூமி சந்திரகுமார், பல்லடம்   ஜே.எம்.மருத்துவமனை டாகடர். ஹாஜிபா ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

 


 

இந்த திரைப்படத்தின் இயக்குனர் என்.பி.இஸ்மாயில் பேசுகையில் நான் ஐ.ஆர்.8 திரைப்படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறேன், வாங்க, வாங்க திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன்.யூஸ்மீ திரைப்படம் டிக்.டாக், பேய் மற்றும் காமெடி கலந்த கதையம் சத்துடன் தயாரிக்கப்படுகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பழனி திருப்பூர் மற்றும் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஆகியவை நடைபெறுகிறது இந்த படத்தின் கதாநாயகர்களாக மூன்று பேர் நடிக்கின்றனர் அதில் நானும் ஒருவர். மற்றொருவர் ராட்சஷன் திரை படத்தின் வில்லன் சரவணன். இன்னொருவர் மஹாலட்சுமி சுவாமிகளின் மகன் கார்த்திக் ஆகியோரும் நடிக்கின்றனர் கதாநாயகிகளாக மேனகா சௌமியா உள்பட 3 பேர் நடிக்கிறார்கள். இந்த படம்  3 அல்லது 4 மாதத்தில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக திரைப்படத்தின் துவக்க விழாவை முன்னிட்டு பூமியை சொர்க்கமாகும் நிகழ்ச்சியில்  மகாலட்சுமி கோவில் வளாகத்தில் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் மற்றும் வனம் அமைப்பின் நிர்வாகிகள் மரக்கன்று நட்டனர்.