கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி் பகுதிகளில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம்கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார்.

 


 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டு புள்ளாம் ஊராட்சி், பூதிமடை புதூர்,அலிங்கியம், குரு மந்தூர் மேடு, ஆண்டவர் மலை பகுதிகளில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் B.அனுராதாB,SC, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும்  S. முத்துக்குமார்,மற்றும் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ,ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் K.P. மெளதீஸ்வரன் ஆகியோருக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்த வேனில் சென்று ஒட்டு சேகரித்தார்.

 


 

இதில் ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் லக்கம்பட்டி சேர்மன் வேலுமணி, பேரூர் கழக செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, வெங்கிடுசாமி, சோமசுந்தரம்,கார்த்தி, பிரபு  மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர் ஒட்டு சேகரிப்பின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பொதுமக்களிடம் கூறியதாவது. அடிப்படை வசதிகளான  குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை வசதிக்கு முக்கியதுவம் அளிக்கப்படும் என்று கூறினார்.

 


 

முன்னதாக தேர்தல் பணிமனையை திறந்து வைத்து ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு 10-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் B.அனுராதாவிற்கு இரட்டை இலை சின்னத்திலும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் S.முத்துக்குமாருக்கு தேங்காய் மூடிகள் சின்னத்திலும், கோபி ஊராட்சி ஒன்றிய 10-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் மௌதீ ஸ்வரன் க்கு இரட்டை இலை சின்னத்திலும்,மற்ற வேட் பாளர்களுக்கு அவரவர்கள் நிற்கும் சின்னத்திலும் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார், வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.