நம்பியூர் வெட்டையம் பாளையயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது 

நம்பியூர் வெட்டையம்பாளையயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

 


 

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூர் வெட்டையம்பாளையம் கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பியூர் அரிமா சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோசணம் செல்லிபாளையம், அாிமா டாக்டர், கே..சண்முகவேல் அவர்களின் தந்தை அமரர் ஆர்.கொழந்தவேல் உடையார் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம்  வெட்டையம் பாளையத்தில் உள்ள கொமரசாமிக்கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 55 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி நிறுவனர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.கே.சின்னசாமி, பள்ளி தாளாளர் அரிமா சிவக்குமார், இணை தாளாளர் அரிமா உமாசிவக்குமார் மற்றும் நம்பியூர் அரிமா சங்க நிர்வாகிகள் இம்முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.