வேப்பூர் அருகிலுள்ள பாசார் ஊராட்சியில் குடிநீர் தொட்டிகள் சேதம்  
வேப்பூர் அருகிலுள்ள பாசார் ஊராட்சியில் குடிநீர் தொட்டிகள் சேதம்  

 


 

வேப்பூர் அருகிலுள்ள பாசார் ஊராட்சியில் உள்ள பல இடங்களில் உள்ள மினி குடிநீர் தொட்டிகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் குடிநீருக்கு அவதிபடுகின்றனர் கடலூர் மாவட்டம்,  வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மங்களூர் செல்லும் வழியில் ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப்பள்ளி அருகே  மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. பாசார் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள்  அனைவரும் அந்த குடிதொட்டியில் உள்ள நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு  முன் இந்த மினி குடிநீர் தொட்டி உடைந்து சேதமடைந்தது அதன்பிறகு தொட்டி சீரமைக்க படாமல் உள்ளது இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதேபோல் பாசார் ஊராட்சியிலுள்ள  நியாயவிலை கடை முன் உள்ள மினி  குடிநீர் தொட்டி ,  பழைய நூல்மில் நிலையம் அருகிலுள்ள குடிநீர் தொட்டி,  மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அடிபம்பு மற்றும் பாசார் கிராமத்தை சுற்றி உள்ள 10 க்கும் மேற்பட்ட மார்க் 2  கைபம்புகள் சீர் அமைக்க படாமல்  உள்ளது. இந்நிலையில் ஊராட்சிக்கு புதிதாக ஐந்து 2 மார்க் கை பாம்புகள் வந்துள்ளதாக ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அதில் இரண்டு கை பாம்புகள் ஏரிக்கரை பகுதிகளிலும்   பழைய மாரியம்மன் கோயில் பகுதியில் 1 கை பாம்புகளும் புதிய மாரியம்மன் கோயில் பகுதியில் இரண்டு பம்புகளும் போடப்படும் என தெரிவித்தார். இதனடிப்படையில் பழைய மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே போர்வெல் அமைப்பதற்கு இடம் சுத்தம் செய்யப்பட்டது.

 

ஆனால் ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் போர்வெல் அமைக்காமல் புதிய காலனி பகுதியில் ஏற்கனவே அடிப்பம்புகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ள இடத்தில் போர்வெல் அமைத்து உள்ளார். இதனால் பழைய மாரியம்மன் கோவில் பகுதி மக்கள் அரசிடம் இருந்து வரும் எந்த ஒரு சலுகையும் எங்கள் பகுதிக்கு கிடைப்பதில்லை   எங்கள் பகுதியில் இதுவரையில் ஒரு கை பம்புகள் கூட இல்லை என வேதனை தெரிவித்தனர். எனவே  மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் கை பாம்புகள் மற்றும் பள்ளியின் அருகே உடைந்த மினி  தொட்டியை சீரமைத்து தரவேண்டும் எனவும் ஒருதலைப்பட்சமாக பணிசெய்யும் ஊராட்சி செயலர் சுப்பிரமணியன் என்பவரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.