விருமாண்டபாளையம் தரைவழிப் பாலம் அருகே ரோட்டில் ஏற்பட்ட விரிசலால் பொதுமக்கள் அச்சம்  

விருமாண்டபாளையம் தரைவழிப் பாலம் அருகே ரோட்டில் ஏற்பட்ட விரிசலால் பொதுமக்கள் அச்சம்.


  


பவானி அடுத்த விருமாண்டபாளையம் கிராமத்தில் உள்ள தரைவழிப் பாலம் அருகே ரோட்டில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் அதிகமாக தண்ணீர் வரும் பொழுது இந்த பாலத்தில் பயணம் மேற்கொள்ள முடியாத காரணத்தால் உயர்மட்ட பாலம் கட்டித்தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பவானி அருகில் உள்ள எலவமலை கிராம பஞ்சாயத்து பகுதியில் செங்கலாபாறை மற்றும் விருமாண்டபாளையம் குக்கிராமங்கள் உள்ளது. பவானியில் இருந்து குட்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள இந்த பகுதியில் விருமாண்டபாளையம் ஏரி நீர் வெளியேற ஒரு தரைமட்ட பாலம் அமைக்கப் பட்டு பல ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இன்னிலையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தண்ணீர் எருமபாளையம் ஏரி நிரப்பி அதிகளவில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் தார்ரோட்டி ஏற்பட்ட சிறிய பள்ளத்தின் காரணமாக தரைப்பாலத்தில் ஒரு பக்கத்தில் உள்ள சுவர் சற்று விலகிய நிலை ஏற்பட்டுள்ளது அதேபோல் தாரோடு டேமேஜ் ஆகிய நிலையில் அப்பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருப்பதை தடுக்கும் வகையில் கவுந்தப்பாடி நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மூலம் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் பெரியபுளியூர் படைப்பாளி மாரப்பன் பாளையம் கிராம பகுதியில் உள்ள ஏரி குளம் குட்டைகளில் இருந்து உபரிநீர் விருமாண்டபாளையம் ஏரிக்கு வருகிறது. இங்கிருந்து செல்லும் தண்ணீரானது ஏரிக்குச் சென்று பின்னர் பவானி ஆற்றில் கலந்து செல்கிறது பல காலங்களாக இந்த பகுதியில் தரைமட்ட பாலம் உள்ளது மழைக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் செல்லும்பொழுது வாகன போக்குவரத்து தடைபடுகிறது தற்போதும் டேமேஜ் ஆகி உள்ளது ஆகையால் அரசு ஆய்வு மேற்கொண்டு உயர்மட்ட பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.