கார் மோதி பசுமாடு பலி

கார் மோதி பசுமாடு இறந்தது.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் என்பவர் தனக்கு சொந்தமான  பசுமாடு மேய்ச்சலுக்காக பாசார் எல்லையில் விட்டிருந்தார். பின்பு நேற்று மாலை 5 மணிக்கு மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை கல்லூர் முருகன் கோயில் அருகே அடையாளம் தெரியாத மர்ம கார் ஒன்று மோதி சென்றது. இதில் பலத்த காயமடைந்த மாடு ரத்தம் சொட்ட சொட்ட இறந்தது. மேலும் இது சம்பந்தமாக மோதி சென்ற கார் மற்றும் கார் ஓட்டுநர் கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமநத்தம் காவல் நிலையத்தில் கருணாகரன் புகார் அளித்துள்ளார்.