உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு நோட்டிசால் பரபரப்பு

உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு நோட்டிசால் பரபரப்பு.

 


 

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா பெரியநெசலூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 5து வார்டு மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக 5வது வார்டில் தெருவு முழுவதும் சாக்கடைகள் நிரம்பிள்ளது. இதனால் கிராம மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர் இதனை சரி செய்யுமாறு கிராம மக்கள் தரப்பில் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் நல்லூர் ஒன்றிய அலுவலர்க ளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.