ஜனவரி 13, 14 விடுமுறையா??

ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி விடுமுறையா ?


சமூக வலைத்தளங்களில் நாளை பொங்கல் விடுமுறை நாட்கள் உடன் 13•01•2020 திங்கள் & 14•01•2020 செவ்வாய் இரு நாட்கள் விடுமுறை விடப்பட்டு அதனை ஈடு செய்ய 08•02•2020 & 14•03•2020 இரு நாட்கள் வேலை நாட்கள் என தமிழக அரசு அறிவித்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது


தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்.... 


ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே வலியுறுத்தியது.
ஆனால் இதுகுறித்து அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால் நாளை கண்டிப்பாக வேலை நாள் என்பது உறுதியாகி உள்ளது. 


இந்த நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை என்பதால் அன்றைய தினமாவது விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளிவருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Previous Post Next Post