பழனி சுவாமி விவேகானந்தர் 157வது ஜெயந்தி விழா
பழனி சுவாமி விவேகானந்தர் 157வது ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது.                             

 

                                                                

                                                

பழனி பாரதியஜனதாகட்சியின்  சார்பாக மயில்  ரவுண்டானா அருகில் சுவாமி விவேகானந்தரின் 157ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி அவரது உருவப்படத்தை மலர்களால் அலங்கரித்து சிறப்பு யாகத்தை  நடத்தினர். இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்டபொதுச் செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். விஷ்வ ஹிந்து பரிசத்தின் திண்டுக்கல் மாவட்ட துணைச்செயலாளர் செந்தில் ஜி முன்னிலை வகித்தார்.  

 


 

பாரதிய ஜனதா கட்சியின் பழனி நகர தலைவர் ராமச்சந்திரன் மற்றும் செந்தில்குமார் பழனிச்சாமி ரவிக்குமார் ஈஸ்வரன் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, அவர் சமுதாயம் மேன்மையடைய ஆற்றிய தொண்டுகள் குறித்தும், அவரது சீடர் சகோதரி நிவேதிதை சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகள் கனகராஜ் சிறப்புரையாற்றும் அங்கு வந்திருந்த அனைவருக்கும் விவேகானந்தரின் கருத்து அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டது

இதில் இந்துமுன்னணியே சார்ந்த  நிர்வாகிகளும் பலர் கலந்துகொண்டனர்.