எம்.எல்.ஏ.,சுகுணசேகரன் ஏற்பாட்டில் தி.மு.க., அ.ம.மு.க.வில் கட்சிகளில் இருந்து 175 பேர் அதிமுகவில் இணைப்பு!!!

சென்னை, ஜன.17


தி.மு.க., அ.ம.மு.க.வில் கட்சிகளில் இருந்து 175 பேர் விலகி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தனர்.


அண்ணா தி.மு.க. ஒருங்கிணை பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கி ணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், தலைமைக் கழகத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். குணசேகரனுடைய ஏற்பாட்டின்பேரில்,


திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் வெ.அ. கண்ணப்பன், 15 வேலம்பாளையம் பகுதி இளைஞர் அணிச் செயலாளர் சி.கேசவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சாமுவேல், மாவட்ட பாத்திர தொழிற்சங்கத் தலைவர் வெங்கடாசலம், செயலாளர் வி. விஜயகுமார், துணைத் தலைவர்களான மாரியப்பன், பா. நாகராஜ் உள்ளிட்ட 25 பேர்களும்;


தி.மு.க.வில் இருந்து விலகிய, பொங்கலூர் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி. சிவசேனாபதி தலைமையில் ஊராட்சி 3 வது வார்டு உறுப்பினர் ஆர். பத்மராணி, ஜெ. ரத்தினசாமி, வி. சங்கர்கணேஷ், சுப்ரமணி உள்ளிட்ட 150 பேர்களும்; ஆகமொத்தம் 175 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.


இந்நிகழ்வின் போது, கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ஆர். வைத்திலிங்கம், எம்.பி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன், கழக அமைப்புச் செயலாளர் நத்தம் இரா. விசுவநாதன், அமைப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான எஸ். கோகுல இந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.