பவானியில் 2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த சக்திவிநாயகர்

பவானியில் 2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டு அலங்காரத்தில் காட்சியளித்த சக்திவிநாயகர்.ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சக்திவிநாயகர் கோவிலில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் இன்று 2020 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோயில் சக்தி விநாயகருக்கு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் மூலம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது ஏராளமான பொதுமக்களும் பக்தர்களுக்கு வந்து வணங்கி சென்றனர்.