சேலம் பிளஸ்-2 மாணவன் ராசிபுரத்தில் கொலை!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அல்லேரி முனியப்பன் கோயில் அருகிலுள்ள ஏரியில் சடலம் ஒன்று கிடப்பதாக ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.


 அதனையடுத்து ராசிபுரம் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன் மற்றும் ராசிபுரம் காவல் ஆய்வாளர் பாரதி மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.


அப்போது மாணவரின் தலை மீது யாரோ கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.  மேலும் அந்த மாணவரின் முகமும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.   கொலை செய்யப்பட்ட மாணவர் யார்..? எந்தப் பகுதியை சேர்ந்தவர்? கொலைக்கான காரணம்? என்ன என்பது குறித்தும் ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது சேலம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவன் வெங்கடேஷ் எனத் தெரிவந்துள்ளது.மேலும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.