ஏல் - பெத்தேல் ஏ.ஜி சபை சார்பில் சீர்காழியில் 2020 - புது வருட சிறப்பு ஆராதனை

ஏல் - பெத்தேல் ஏ.ஜி சபை சார்பில் சீர்காழியில் 2020 - புது வருட சிறப்பு ஆராதனை.சீர்காழி தென்பாதி வி.என்.எஸ் நகரில் உள்ள ஏல் பெத்தேல் ஏ.ஜி சபையின் சார்பாக புது வருட ஆராதனை இந்திய தேச அனைத்து மக்களுக்காக கூட்டு பிரார்த்தனை சீர்காழி எல்.எம்.சி விளையாட்டு மைதானத்தில் டிசம்பர் 31-ம் தேதி செவ்வாய்கிழமை இரவு 9 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றது. ஏல்-பெத்தேல் ஏ.ஜி சபையின் தலைமை போதகர் எம்.அமல்ராஜ் வாக்குத்தத்த செய்தி வாசித்தார்.புத்தாண்டு வாழ்த்து செய்தியை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி கூறினார். இந்த நிகழ்ச்சியில்; சீர்காழி நகர அம்மா பேரவை செயலாளர் ஏ.வி.மணி, வைத்தீஸ்வரன்கோயில் பேரூர் கழக செயலாளர் போகர் சி.ரவி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் எல்.வி.ஆர்.வினோத், சீர்காழி ஒன்றிய மகளிரணி செயலாளர் அஞ்சம்மாள், மாவட்ட பிரதிநிதி இன்ஜினியர் ராமையன், வழக்கறிஞர் தியாகராஜன், ரவிசண்முகம், மருதுபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.