கழுதைக்காக காத்திருந்த மக்கள் : 2020லும் இப்படி ஒரு சம்பவம்

பொங்கல் பரிசு எப்போது வரும் என்று கழுத்தைக்காக மக்கள் காத்திருந்த சம்பவம் பரிதாபத்தை  ஏற்படுத்தி உள்ளது. 



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது நெக்னாமலை. வாணியம்பாடியில் இருந்து   சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெக்னாமலை  மலை கிராமத்திற்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இன்னமும் சாலை வசதி இல்லாத மலைக்கிராமமாக இருப்பதால் இங்கு நடராஜா சர்வீஸ் பிரசித்தம். இந்த நிலையில்  தமிழக அரசு நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும்  அரிசி,சர்க்கரை,முந்திரி,திராட்சை,கரும்பு உடன்  ரூ.1000 தொகையை சேர்த்து அடங்கிய பொங்கல் பரிசுகளை இந்த கிராமத்துக்கு கொண்டு செல்ல தாமதம் ஆனது. மலை கிராம மக்களுக்கு சாலை வசதி இல்லாததால் அவர்களுக்கு வினியோகம் செய்ய கழுதை மீது ஏற்றி சென்றனர்.  வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர்  குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் திருப்பதி உள்ளிட்டோர்  கழுதைகள் மீது ஏற்றி  பொங்கல் பரிசுகளை எடுத்து சென்றனர்.
 அந்த கிராம மக்களும் கழுதைகள் வருவதற்காக காத்திருந்து பொங்கல் பரிசுகளை பெற்று சென்றனர். இந்த கிராமத்துக்கு எப்படியாவது சாலை வசதி அமைத்தால் மக்கள் பயன் பெறுவார்கள். செய்வீர்களா.. அரசு அதிகாரிகளே நீங்கள் செய்வீர்களா..? 


Previous Post Next Post