மதுரையில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி வரும் 25ந் தேதி நடைபெற இருக்கிறது. இப் போட்டியில் 32 மாவட்டங்களில் இருந்து 64 அணிகள் பங்கேற்கிறது.

 


 

இந்த கபடி போட்டி தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களில் ஜனவரியில் அதனை தொடர்ந்து லீக் சுற்றுகள், காலிறுதி , அரையிறுதி, மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னையில் பிப்ரவரி மாதம் நடத்த உள்ளது. அங்இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு அமைச்சர் கபடி அசோசியேஷன் ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் ஆவார்கள். ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள் விதமாக 32 மாவட்டங்களை சேர்ந்த 384 ஆடவர்களும், அதேபோல் பெண்கள் அணியில் மாவட்டத்திற்கு 12 வீரர்கள் வீதமாக 384 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர்.  இப்போட்டிகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஏனைய போட்டிகள் அனைத்தும் சென்னையில் 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

 

முதல் மண்டல போட்டி டாக்டர் எம்ஜிஆர் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வரும் 25 மற்றும் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 8 ஆண்கள் அணிகள் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வெங்கடேசன் எம்பி, கலெக்டர் வினய், தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியன் மாநில தலைவர் சோலைராஜா, தமிழ்நாடு அமெச் சூர் கபடி அசோசியேட் மாநிலச் செயலாளர் சபியுல்லா,

ப்ரான்ட் மீடியா ஈவென்ட்ஸின் நிறுவனர் தமிழ்செல்வன், தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக்கின் நிறுவனர் சுரேஷ் மற்றும் ப்ரான்ட் மீடியா ஈவென்ட்ஸின் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேசனின் கலெக்டர் மற்றும் செயலாளர்கள் , ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

 

26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நாள் போட்டி அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியன் மாநில தலைவர் சோலைராஜா,  தமிழ்நாடு அமெச் சூர் கபடி அசோசியேட் மாநிலச் செயலாளர் சபியுல்லா, ப்ரான்ட் மீடியா ஈவென்ட்ஸின் நிறுவனர் தமிழ்செல்வன், தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக்கின் நிறுவனர் சுரேஷ் மற்றும் ப்ரான்ட் மீடியா ஈவென்ட்ஸின் ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேசனின் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்கள் , ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.