திருப்பூர் மாநகரில் 27 கொலை; கமிஷனர் டேட்டா!

தமிழகத்திலேயே திருப்பூர் மாநகரில் அமைதி ஏற்படுத்த 21 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய்குமார் பேட்டியளித்தார்.



திருப்பூர் மாநகரில் கடந்தாண்டு 27 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 26 கொலை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநகரில் அமைதி ஏற்படுத்த 21 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாலை விதிமீறல் தொடர்பாக 2,31,172 வழக்குகள் பதியப்பட்டு 3 கோடியே 4 லட்சத்து 34 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. திருட்டு வழக்குகள் 2018 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 19 சதவிகிதம் குறைவாகவே நடந்துள்ளது .


 277 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 252 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 1 கோடியே 51 லட்சம் மதிப்பிலான திருடப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனை தொடர்பாக 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 113 நபர்கள் கைது செய்யப்பட்டு 118 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இதில் 3 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 283 லாட்டரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டை விட 10 சதவிகித சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது. 5889 பேர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார் தெரிவித்தார்.


Previous Post Next Post