நண்பனை கொன்றவரை ஓடவிட்டு வெட்டிய மர்ம நபர்கள்: துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

 


மதுரை, ஆனையூர்  எஸ்.வி.பி.,  நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28) இவர் மீது 3 கொலை வழக்குகள நிலுவையில் உள்ளன.


இந்த நிலையில், புதூர்  எஸ்.ஆலங்குளம் பகுதியில் தனியார் எண்ணெய் மில்  அருகில் உதயகுமார் சென்றுகொண்டு இருந்தார்.


அப்போது முன்விரோதம் காரணமாக  மர்ம நபர்கள் உதயகுமாரை ஓடவிட்டு விரட்டி வெட்டினர்.


 வெட்டுக்காயம் பட்ட உதயகுமார சம்பவ இடத்தில்  துடிதுடித்து உயிரிழந்தார். கொலைகாரர்கள் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து எதுவுமே நடக்காதது போல அசால்டாக தப்பிச் சென்றுள்ளனர்.


 அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த கூடல்புதூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர்.


காவல்துறையினர் விசாரணையிள்  உதயகுமார் பிளேடு பாண்டி என்பவருடைய நண்பரை படுகொலை செய்ததாகவும், பலிக்கு பலியாக் இந்த படுகொலை நடந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். வாலிபரை நடுரோட்டில் ஓடவிட்டு வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.