'நன்றி சொல்ல உனக்குவார்த்தை இல்லை எனக்கு.. கழுதூர் ஊராட்சி தலைவரின் மக்கள் பாசம்!
கழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெரிவித்தார்.

 


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கழுதூர்  ஊராட்சி மன்ற தலைவராக கருணாநிதி பொதுமக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதை தொடர்ந்து ஊராட்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாகச் சென்று நன்றி தெரிவித்து வந்தார். பொதுமக்கள் மேளம் அடித்துக் கொண்டும் நடனம் ஆடிக் கொண்டும் ஊராட்சித் தலைவருக்கு வரவேற்பு வழங்கி கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் எம் எஸ்  சடைய குமார் ஊராட்சி மன்ற தலைவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விசிக சங்கர், ரஞ்சித், குமார், சத்யராஜ், சமத்துவபுரம் செல்வேந்திரன் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.