பழனியில் மூன்றாவது தேசிய சித்த மருத்துவ தினம்


பழனியில் மூன்றாவது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.. 


 

 பழனி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பாக தேசிய மூன்றாவது சித்த மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வின் தலைமையாக சார் ஆட்சியர் உமா மற்றும் வரவேற்புரையாக அரசு மருத்துவமனை உதவி சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் மகேந்திரன், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மருத்துவர் பூங்கோதை செல்வராஜ், மாவட்ட சித்த மருத்துவர் விஜயா,பழனி சரக காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன்,  வட்டாட்சியர் பழனிச்சாமி, மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் புஸ்பராணி, மருந்தாளுநர் சித்தா பிரிவு முத்தழகி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் கூறுகையில் சித்த மருத்துவம் என்பது தமிழர்களின் ஆதிகாலம் தொட்டே மருத்துவ பயன்களைப் பற்றி அறிந்து அதற்கேற்றார் போல் இயற்கை செடி கொடிகளை வைத்து மருத்துவம் செய்து வந்துள்ளனர். மேலும் பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு செடிகளும் கொடிகளும் பெயர்களும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று சித்தர்களும் சித்த மருத்துவர்களும் அறிந்து வைத்திருந்தனர். நம்முன்னோர்கள் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு மருத்துவ குணங்களை வைத்தே செய்து வந்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்றும் நம் மக்கள் சித்த மருத்துவங்களை அனுபவித்து வருகின்றனர்.

 

 எவ்வளவு பெரிய அளவில் ஆங்கில மருத்துவங்கள் உங்ளே வந்தாலும் சித்த மருத்துவத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை ஒவ்வொரு வேர்களும் மருத்துவ குணம் நிறைந்தவை ஒவ்வொரு செடிகளும் ஒவ்வொரு மருத்துவத்திற்கு பெயர் பெற்றவை ஒவ்வொரு கொடிகளும் ஒவ்வொரு நோய் போக்கும் தன்மை உடையவையாக காணப்படுகிறது.எனவே மக்கள் மீண்டும் சித்த மருத்துவ மருந்துகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதை அறிந்த தமிழக அரசு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவப் பிரிவு ஏற்படுத்தி பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணும் வகையில் சித்தமருத்துவம் விளங்கி வருகிறது.எனவே சித்த மருத்துவத்தின் மூலம் நோய்களை போக்கிடுவோம்.

 

 உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்போம் தினமும் நிலவேம்பு கசாயம் பருகுவோம் டெங்கு காய்ச்சல் இல்லா உலகினை படைத்திடுவோம். இந்நிகழ்வில் பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உதயகுமார் நன்றியுரை கூறி விழாவினை நிறைவுசெய்தார்.இவ்விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக நிலவேம்பு குடிநீர் மற்றும் இயற்கை மருந்துகளால் உருவாக்கப்பட்ட மருத்துவ குணம் மிக்க பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.