தூத்துக்குடி கோர விபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் 4 பேர் பலி!!!

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து:
தமிழக துணை சபாநாயகரின் உறவினர்கள் 4 பேர் பலி - லாரி ஓட்டுனர் கைது!


சென்னையைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் தன் மகள் கவிதா மற்றும் பெயரக் குழந்தைகளுடன் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு  திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி இன்று நள்ளிரவில்  இரண்டு கார்களில் வந்தனர்.


 ஸ்டெர்லௌட் ஆலைக்கு  அருகில் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது லாரி மற்றும் கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளனது. 


இதில், சுபாஷின் பெயரன் நீரேந்திரன், பெயர்த்தி ரம்யா, ரம்யாவின் தோழி பார்க்கவி மற்றும் டிரைவர் ஜோவன் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் தமிழக துணை சபாநாயகரின உற்வினர்கள் அவர்


சிப்காட் காவல் நிலைய போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


எஸ்.பி., அருண்பால கோபாலப் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.