சமுக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.5.31 இலட்சம் மதிப்பில் மின் இணைப்புடன் கூடிய புதிய பகுதி கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்

தூத்துக்குடி கலெக்டர்   அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் கொண்டு செயல்படும் டிரிம் கிச்சன்-இல்  சமுக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.5.31 இலட்சம் மதிப்பில் மின் இணைப்புடன் கூடிய புதிய பகுதி மற்றும் ஜெராக்ஸ் மெஷின், லேமினேஷன் மிஷின், ஸ்பைரல் பைண்டிங் மிஷின் ஆகியவற்றை கலெக்டர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து பார்வையிட்டார்.
 இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு சமுக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் மின் இணைப்புடன் கூடிய புதிய பகுதி மற்றும் ரூ.1.31 இலட்சம் மதிப்பில் ஜெராக்ஸ் மெஷின், லேமினேஷன் மிஷின், ஸ்பைரல் பைண்டிங் மிஷின் என மொத்தம் ரூ.5.31 இலட்சம் மதிப்பில் பகுதி மற்றும் மிஷின்களை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், குத்துவிளக்கேற்றி வைத்தார். இப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஸ்கீரிம் பெட்டியினையும் பார்வையிட்டார். மேலும், பொது மக்கள் வந்து செல்ல பேவர்  பிளாக் அதிகமாக அமைக்கவும், சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் .அதனை தொடர்ந்து, டிரிம் கிச்சன்-இல்  உட்புறம் உள்ள சுவர்  பகுதியில் வண்ணங்கள் பொருத்தப்பட்ட ஸ்டிக்கர்ஸ்களை பொருத்திட வேண்டுமெனவும் தொpவித்தார் . இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்  (வருவாய்) விஷ்ணு சந்திரன், சப் கலெக்டர் சிம்ரான் ஜித் சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  தனபதி,  மகளிர்  திட்டம், திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர்  ஸ்ரீ.வெங்கடேசன், உதவி பொறியாளர்  தளவாய் மற்றும், அலுவலர்கள், டிரிம் கிச்சன் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.