கண்ணிமைக்கும் நேரத்தில் குடும்பமே காலியான சோகம்: கொடூர விபத்தில் 5 பேர் பலி

 


கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வண்டிப்பாளையம்-சேந்தமங்கலம் வளைவு சாலையில், காரும் தனியார் பஸ் மோதிய கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே தாய், மகள் மற்றும்  ஓட்டுனர்  உட்பட மூன்று பேர் பரிதாபமாக காரிலேயே உடல் நசுங்கி பலியாகினர்.


மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு வயது சிறுவன், 7 வயது சிறுவன் ஆகியோருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இரு சிறுவர்களும் உயிரிழந்தனர 


உளுந்தூர்பேட்டை  டி.எஸ்.பி விஜயகுமார், திருநாவலூர்  இன்ஸ்பெக்டர் விஜி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில்  விசாரணை செய்து செய்து வருகின்றனர்.


 விசாரணையில, திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் முத்தமிழ்ச் செல்வன் (வயது 35) என்பது இவர்தெரியவந்தது. இவர் ஐடி கம்பெனி வழியாக அயர்லாந்து பயிற்சி   முடித்து விட்டு விமானம் மூலம் சென்னைக்கு சில நாட்களுக்கு முன்னர் வந்து உள்ளார். 


இவரை வரவேற்க  இவரது மனைவி குழந்தைகள் உள்பட 4 பேர் சென்னைக்கு  திருச்சியில் இருந்து இரயில் மூலமாக சென்றுள்ளனர். இதில் பழனிவேல் மனைவி நிஷா (வயது 32).


இவர்களது, மகன் வயது 7,  மகள் வைஷ்ணவி வயது 1, மாமியார் மல்லிகா வயது 71 ஆகிய ஐந்து பேரும் பழனிவேல் ஐ ஏற்போட்டில் வரவேற்று  அங்கு தங்கி விட்டு இன்று காலை கிளம்பி உள்ளனர்.


 வாடகை காரில் வந்த அவர்கள், உளுந்தூர்பேட்டை மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தநர்.


அப்போது உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் -சேந்தமங்கலம்  வளைவு சாலை பகுதியின் அருகே சென்னையிலிருந்து வந்த இவர்கள்து கார் திடீரென்று ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே பாய்ந்து, எதிரே வந்த தனியார் பேருந்து மேல் மோதியது. இதில்  கார் பஸ்சுக்கு   அடியில் சிக்கி அப்பளம்போல் நொறுங்கியது.   


உடனே பஸ்சில் பயணம் செய்தவர்களும்  பொதுமக்களும்,  கார் மீது ஏறி நின்ற பஸ்சை சாலையோரம் பள்ளத்தில் கீழே நெட்டி தள்ளிவிட்டு காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.


ஆனால் காரில் வந்தவர்கள் தாயும், மகள், மரு மகன், உட்பட மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நசுங்கி இறந்தார்கள். 


இந்த விபத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு குழந்தைகளில் 7 வயது சிறுவன் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் சிகிச்சை பலனின்றி 1 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.


பத்து குறித்து உளுந்தூர்பேட்டை உட்கோட்ட டிஎஸ்பி விஜயகுமார், திருநாவலூர் காவல் ஆய்வாளர் விஜி, மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் போலீசார்கள் விபத்தில் சிக்கிக்கொண்ட பிரேதங்களை மீட்டு பிரேதநகளை டோல்கேட்டின் திறந்தவெளி வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.


இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 5  பேர் பலியாகி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.