எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் கைது!

எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு தொடர்பாகநெல்லை, தென்காசியைச் சேர்ந்த 
5 பேர்  உபா சட்டத்தில் கைது.


களியக்காவிளை சோதனை சாவடியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக உபா சட்டத்தில் நெல்லை, தென்காசியை சேர்ந்த 5 பேரை போலீசார்  கைது செய்தனர்.கன்னியாகுமாரி  மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கடந்த 8ம் தேதி இரவு தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிரவாதிகள் திருவிதாங்கோட்டை அப்துல்சமீம், இளங்கடை தவுபிக் ஆகிய இருவர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிரவாதிகளுக்கு உதவியவர்களை போலீசார்  தேடி தேடி கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர் .


இதுதொடர்பாக தென்காசியை சேர்ந்த சிலருக்கு தொடர்பு உள்ளது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் சிலரை தமிழக மற்றும் கேரள போலீசார்  இணைந்து கேரள மாநிலம் பாலருவி பகுதியில் சிலரை கைது செய்தனர் . அவர்கள் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. போலீசரின் தீவிர விசாரணையில் அவர்கள் தென்காசியை சேர்ந்த முகமது இஸ்மாயில், செய்யது ராஜா, அல்ஹபிப் (நெல்லை பேட்டை), அப்துல்காதர், முகமது ‘க்கார்யா என தெரிவந்தது.போலீசார்  கைது செய்யப்பட்ட 5 பேர்  மீதும் குற்றவியல் திருத்த சட்டம் 7 (1) (1) மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் என அழைக்கப்படும் உபா சட்டம் 16,18,20 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் . கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து தென்காசி, நெல்லை பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.