அவனியாபுரத்தை அதிர வைத்த காளைகள்: அசால்டாக மடக்கிய காளையர்கள் !!!

சங்ககாலம் தொட்டு நடந்து வரும் ஏறு தழுவல் தமிழனின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிடும் அற்புதமான வீர விளையாட்டு. இதில் தற்காலத்திலும் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது ஆகும்.


இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிரது.


 மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.   இதனால் அவனியாபுரம் பகுதியில் மாபெரும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போட்டி நடக்கிறது.  இந்த போட்டியில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வீரர்களுக்கும், மாடுகளுக்கும் உதவும் வகையில் மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் அங்கு உள்ளனர். 5க்கும் ஏற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அங்கு இடம்பெற்றுள்ளது.


ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக இவர்களின் உடல் தகுதி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தீவரம் காட்டி வருகின்றனர்.


தமிழகம் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார். அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.


இந்த நிகழ்ச்சியை காண பல மாநிலங்களில் இருந்து மக்கள் தமிழகம் வந்துள்ளனர். பல நாடுகளில் இருந்தும் அவனியாபுரத்தில் மக்கள் குவிந்துள்ளனர்.


. மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். போட்டிகளை கண்காணிக்க 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார், எம்எம்ஏக்கள் கலெக்டர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காளைகளை பிடிக்க ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 75பேர் காலத்தில் இறக்கப்படுகின்றனர்.


மதியம் 2 மணி வரை 400 காளைகள் களம் கண்டுள்ளன. புதுக்கோட்டை அனுராதாவின் காளை  உள்பட பலர் காளைகள் களத்தில் நின்று மிரட்டி சதுராடின. காளையர்களும் காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளினர்.


Previous Post Next Post