திருவில்லிபுதூர் ஆண்டாளுக்கு இந்தியாவிலேயே பெரிய தங்க விமானம்!!!

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது


திருவில்லிபுத்தூர்: இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் முக்கியமானது. இந்தக் கோயிலுக்கு விமானம் இருந்தபோதிலும், தங்க விமானம் செய்யப்படாமல் இருந்தது.


பக்தர்களின் கோரிக்கையின்பேரில் தங்கவிமானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. தொழிலதிபர்கள், பக்தர்கள் என உதவியில் 78 கிலோ தங்கத்தில், ரூ.24 கோடி செலவில் தங்க விமானம் தயார் செய்யப்பட்டது.


புதிய தங்க விமானத்தை சுற்றியிருந்த சாரங்கள் நேற்று பிரிக்கப்பட்டன. இதையடுத்து வெயிலுக்கு தங்க விமானம் தகதகவென ஜொலித்தது. விமானம் அமைந்துள்ள மேற்புறப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி ராமராஜா கூறுகையில், ‘‘ஆண்டாள் கோயில் தங்க விமானம் திருப்பதி ஏழுமலையான் கோயில் தங்க விமானத்தை காட்டிலும் பெரியது. இந்தியாவில் உள்ள கோயில்களிலேயே மிகப்பெரிய தங்கவிமானம் இதுதான்’’ என்றார்.