காரில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ குட்கா பறிமுதல்!!!

திருப்பூரில் காரில் கடத்திய 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். தப்பி ஓடிய நபரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பூர்  சின்ன பொம்மநாயக்கன்பாளையம் சாலையில் அனுப்பர்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த காரை போலிசார் நிறுத்த முயன்ற போது வாகனத்தை  நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த போலிசார் காரை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கே.எஸ்.ஆர் நகர் பகுதியில் காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனையடுத்து வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் அதில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 750 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடதத்இ செல்லப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த  அனுப்பர்பாளையம் போலிசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.