பாலமேடு ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 936 வீரர்கள் பங்கேற்பு

 மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. இதில் 700 காளைகளும் 936 வீரர்களும் முன்பதிவு செய்து தயார் நிலையில் உள்ளனர் போட்டி காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணிக்கு முடிவடைகிறது இதனைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . 


2 காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை கண்காணிப்பாளர், 30 மாவட்ட துணை கண்காணிப்பாளர், 80 இன்ஸ்பெக்டர்கள், என மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்


பாலமேடு ஜல்லிக்கட்டில் மொத்தம் 700 காளைகளும் 936 வீரர்களும் களம் காண தயாராக உள்ளனர் 


தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளது