வீடு வீடாக சென்று வங்கி ஊழியர்கள் வராக்கடன் வசூல்

வீடு வீடாக சென்று வங்கி ஊழியர்கள் வராக்கடன் வசூல்

 

சென்னையில் உள்ள இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தின் அறிவுத்தலின்படி தமிழகம் முழுவதும் வராக்கடன் வசூலிக்கும் செயல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நத்தத்தில் உள்ள இந்தியன் வங்கி சார்பில் அந்த வங்கியில் கடன்பெற்ற வாடிக்கையாளர்களின் தவணை கடந்த, காலம் தாழ்த்திய, கட்டாமலே விடுபட்டுப்போன வாடிக்கையாளர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று வசூலில் ஈடுபட்டனர். அப்போது கடன் செலுத்தாத வாடிக்கையாளர்களை வங்கிக்கு வந்து கடனை செலுத்துமாறும் அறிவுறுத்தினார்கள். இதில் வங்கியில் வராக்கடன் வசூல் இயக்கத்தினர் தங்கள் இந்தியன் வங்கி சார்பில் வராக்கடனை முடிப்பீர்!  சட்ட நடவடிக்கை தவிர்ப்பீர்!, நீங்கள் வாங்கிய கடன் மக்களின் வரிப்பணம்!, போன்ற பதாதைகளை கையில் ஏந்திச் சென்று வசூலில் ஈடுபட்டனர். இந்த பணி வரும் 8ந் தேதி வரை நடைபெற உள்ளது.