ஆஸ்திரேலியாவில் முட்டை அளவிற்கு பெய்யும் ஆலங்கட்டி மழையால் சேதம்!!

...



காட்டுத் தீயால் பற்றி எரிந்த ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீ தற்போது பெய்த மழையால் ஓரளவிற்கு தணிந்துள்ளது. இந்நிலையில் மெல்பர்ன் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.அந்நகரின் புறநகர் பகுதியான ஈஸ்ட் கிப்ஸ்லான்ட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஆலங்கட்டி மழை பெய்தது.


கோழி முட்டை அளவில் விழுந்த ஆலங்கட்டிகளால் வீடுகள், உணவகங்களின் கூரைகள் மற்றும் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின. தொடர்ந்து ஆலங்கட் மழை பெய்ததால் மெல்பர்ன் நகருக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.


ஆலங்கட்டிகளின் வேகம் தாளாமல் சில இடங்களில் மரங்களில் இருந்த சிறு கிளைகள் முறிந்து விழுந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...