தூத்துக்குடியில் கிராமிய கலைவிழா - கனிமொழி, நல்லகண்ணு, கீதாஜீவன் பங்கேற்பு

தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை ஒன்றிணைக்கும் விதமாக "தமிழன்டா - 2020" என்னும் கிராமிய கலைவிழா தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 10ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது .இக்கண்காட்சி திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.


விழாவில் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம், தலைவர் ஜெகஜீவன் எழுதிய நோயில்லாமல் வாழ்வது எப்படி? என்ற புத்தகத்தையும், அவர் எழுதி பாடிய "தமிழன்டா" ஒலிப்பேழையையும் ஆட்சியர் வெளியிட்டார். போப் கல்லூரி பேராசிரியர் முனைவர் தினகரன் தலைமையில் என்.எஸ்.எஸ் மாணவர்கள் தமிழன்டா ஒலிப்பேழை வெளியிட்டவுடன் 20 மாணவர்கள் நடனம் ஆடினார்கள்.


இந்த நிகழ்ச்சிக்கு தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்சகோதரர் ஜோசப் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரர் மரிய ஜோசப் அந்தோணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயக மூர்த்தி, மாநகர ஓட்டல் உரிமையாளர் சங்க செயலாளர் செந்தில் ஆறுமுகம், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், இசையமைப்பாளர் சீலன் ஸ்ருதி, உலக திருக்குறள் பேரவை மாவட்ட செயலாளர் அன்பழகன், அரசு வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


மாலையில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி பிரகாஷ் தொடங்கி வைத்தார்.பாரம்பரிய உணவுத் திருவிழாவை புறநகர் டி.எஸ்.பி கலைக்கதிரவன் தொடங்கிவைத்தார். அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்க செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ் நன்றியுரை ஆற்றினார். கண்காட்சி மற்றும் போட்டிகளை பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்.


மாலையில் பரிசளிப்பு விழாவில் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையத் தலைவரும் "தமிழன்டா - 2020" நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான செ.ஜெகஜீவன் வரவேற்புரையாற்றினார்.
இந்த பாரம்பரிய கலை, விழாவில் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி அருண்பாலகோபாலன் பரிசுகளை வழங்கினார்.


ஷைன் யோகா பவர் நிறுவனர் தனலெட்சுமி,யோகா ஆசிரியர் சுந்தரவேல்,வ.உ.சி.கல்லூரி பேராசிரியர் முனைவர் சகா சங்கர் ,ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். போப் கல்லூரி பேராசிரியர் முனைவர் தினகரன் தொகுத்து வழங்கினார்.தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையப் பொருளாளர் ஜெசிந்தா நன்றியுரை ஆற்றினார். இந்த கண்காட்சி மற்றும் போட்டிகளை பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்.


2-வது நாள் நிகழ்வில் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட செயலர் எம்.சுந்தரவேல் ,வரவேற்புரையாற்றினார்.முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.பாஜக தொழிலதிபர் கே.பழனிவேல் முன்னிலை வகித்தார்.விழாவில் அதிமுக மேற்கு பகுதி செயலாளர் முருகன்,சமூக ஆர்வலர் பிளட் ஜெயபால்,திமுக வக்கீல் ஜே.ரூபராஜா,ஜேசுராஜ்,யோகா கலை மையம் மாநில செயலர் எஸ்.ஆறுமுகம் போன்றோர் பங்கு பெற்று சிறப்பித்தனர்.


விழாவில் மாநில அளவிலான சிலம்பு போட்டியை தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி தொடங்கிவைத்தார்.தென் இந்திய அளவில் நடைபெற்ற யோகா போட்டியை தூய மரியன்னை பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் அந்தோணி,தொடங்கி வைத்தார்.அன்று மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் துறைமுக அதிகாரி சண்முககுமாரி தலைமை தாங்கினார்.விழாவில் மும்மதத்தை சார்ந்தவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள் அதில் பிரத்தியரங்காதேவி சித்தர் பீடம் நிறுவனர் சற்குரு சீனிவாசசித்தர் ,தூத்துக்குடி மாவட்ட ஹாஜி முஃஜிபூர் ரகுமான்,ஆசீர்வாதம் டிவி.நாடக பிரிவு இயக்குனர் சினிலோக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்பித்து பரிசுகள்,விருதுகள் வழங்கினார்கள்.


3-வது நாள் நிகழ்ச்சியில் 2020 பனை கொட்டைகளை விதைக்கும் விழாவில் தூத்துக்குடி வழக்கறிஞர் சொர்ணலதா தலைமையில் பனைக்கொட்டை விதைக்கும் பணியை தொடங்கிவைத்தார்.


அதன் பின்னர் நடைபெற்ற விழாவில் பனை விதைகள் பற்றி மனித உரிமைகள் கழகம் மாநில வர்த்தகர் அணி செயலாளர் வழக்கறிஞர் ஜெபசிங் பேசினார்.தமிழ் பண்பாடு பற்றி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் பேசினார்.மரம் வளர்ப்பதன் பயன் பற்றி ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனர் வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் பேசினார்.


பின்னர் 300க்கும் மேற்பட்ட நலிவடைந்த கிராமிய கலைஞர்கள் 6 மணிநேரமாக கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள்.
மாலையில் தூத்துக்குடியில் தமிழண்டா என்ற தமிழர் பாரம்பரிய கலை கண்காட்சி திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதுபெரும் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.


விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கனிமொழி எம்.பி பேசுகையில்:- "இங்கு அமர்ந்திருக்கின்ற மாணவர்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் கம்யூட்டர் செல்போன் விளையாட்டு என நவீன உலகத்தில் அதை வைத்து விளையாடும் காலம் இது. பாரம்பரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூகம் மொழி கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளை பொருமையோடு இருந்து இதை எதிர்கால உலகத்திற்கு எடுத்துச்செல்லும் பொறுப்பு உங்களை போல இளைய தலைமுறையினருக்கு பொறுப்புண்டு என்பதை உணர்ந்து தமிழ்மொழி மற்றும் நம்முடைய கலாச்சாரம் போன்றவைகளை எடுத்துச்செல்ல வேண்டும்.


தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா மதம் சார்ந்ததாக இல்லாமல் நாம் சாப்பிடும் உணவிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக ஜாதி மதம் கடந்து அனைவரும் கொண்டாடும் திருவிழாவாகும். நம்மை யார் என்று அடையாளம் காட்டி கொள்வதற்கு தமிழர் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் பெரியார் வாழ்ந்த மண் மரம் வெட்டுதல் காடுகள் அழிப்பு போன்றவற்றை தடுத்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.


கார்ப்பரேட் குளிர்பாணங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு கேடு, வெளிநாட்டில் சாப்பிடும் உணவுகளை போன்று நாமும் அதை சாப்பிட வேண்டும் என்று எண்ணக்கூடாது. எல்லோருக்கும் தமிழர்களின் கலாச்சாரமும் பாரம்பரியமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நம் இயற்கை பொருட்களான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தோடு வாழலாம்.


வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப சில கலாச்சாரம் தேவை அப்துல்கலாம் தமிழர்களாக பிறந்து உயர்ந்தவர் அதுபோல் எல்லோருக்கும் ஓரு லட்சிய உணர்வோடு உழைத்து முன்னேற வேண்டும். தமிழர்களின் பாரம்பரியத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்றார்.


விழாவில் மங்கலராஜ் அக்ரோ பார்ம் நிறுவனர் தொழிலதிபர் மங்கலராஜ் வாழ்த்துரை வழங்கினார்.பின்னர் மறைந்த தலைவர்கள் குரூஸ்பர்னாந்து,ரோச் விக்டோரியா, பெரியசாமி, ஏ.பி.சி.வீரபாகு, எம்.சி.வீரபாகு,சி.வ.சின்னக்கண்ணுப்பிள்ளை , போன்ற பல்வேறு பெயரில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமிக்கு மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் பெயரிலான விருது வழங்கி கனிமொழி கௌரவித்தார்.


அதுபோல் கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சுமுத்து, ஜெனோ ரவேல், தாகூர் டிரோஸ்,வக்கீல்கள் செல்வம் கிறிஸ்டோபர் ,ஜெபசிங் ,ரமேஷ்பாண்டியன்,மற்றும் சமூக ஆர்வலர் ராஜா,திருமணிராஜா,பிளட் ஜெயபால்,பாரம்பரிய பொருள்களை பாதுகாத்து மக்களுக்கு கண்காட்சி மூலமாக வெளிப்படுத்திவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் குப்புசாமி, முத்துலெட்சுமி ,வ.உ.சி.கல்லூரி பேராசிரியர் முனைவர் சகா சங்கர்,போப் கல்லூரி பேராசிரியர் முனைவர் தினகரன் ,நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் அருள்மலர் காலின்ஸ் ,அகமகிழ் கலைக்கூடம் லெனின், உள்ளிட்ட பலருக்கும் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் அந்தோணி, தாளாளர் ஜோசப்,மதர்தெரசா பொறியியல் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், மாநகர செயலாளர் ஞானசேகரன்,திமுக மாநகர செயலர் ஆனந்தசேகரன்,துரை, அருட்சகோதரி ஜெய சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.3-நாட்களும் பாரம்பரிய மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டது.அதில் 500க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றார்கள்.