பசுமை வானொலி சார்பாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

பசுமை வானொலி சார்பாக ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்ட, வேடசந்தூர் அருகே விட்டல் நாயக்கன்பட்டி அமைதி தொழில் பள்ளியில் பசுமை வானொலி சார்பாக பெண்கல்வி, குழந்தை திருமணம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது . அமைதி அறக்கட்டளை தலைவர் பாஸ்கர் அவர்கள் தலைமை தாங்கினார் . தொழில்நுட்பக் கலைஞர் ஸ்டாலின் ஆண்டனி வரவேற்றார் . டாக்டர்.சாம் இளங்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளின் மனநிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து எடுத்துரைத்தார்.  இந்நிகழ்வில்  மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மகேந்திரன் கூறினார் . நிகழ்ச்சி ஏற்பாடுகளை பசுமை வானொலி  செய்திருந்தது.