பிக்னிக் சென்ற போது கணவன் கண் முன்னால் மனைவியை மிதித்து கொன்ற யானை !

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே  பாலமலை உள்ளது.  இங்குள்ள குஞ்சூர்பதியில் இருந்து மாங்குழி வழியாக ஒருசிலர் பாலமலைக்கு  சிலர் டிரெக்கிங் செல்வது வழக்கம்.


இந்த நிலையில் கோவை சங்கரா கண்மருத்துவமனையில் பணி புரியும் பெண்  அதிகாரி புவனேஸ்வரி என்பவர் கணவர் மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்று டிரெக்கிங் சென்றுள்ளார்.


 அப்படி செல்லும் போது ஒற்றை யானை ஒன்று அவர்களை துரத்தியது இதில் புவ்வனேஎஸ்வரி மாட்டிக்கொண்டார். அவரை யானை மிதித்தே கொன்றது.


வனத்துறையினர் புவனேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோத்னைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு டிரெக்கிங், பிக்னிக் வருபவர்களை தடை செய்ய ரோந்து பணி மேற்கொள்ல  வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.