வரிசைகட்டி பொங்கல் வைத்த பெண்கள் : திருப்பூர் தமிழர் பேரவை அசத்தல்

திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா- சாதி மதத்தை கடந்து பொங்கல் பானை வைத்து பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.

 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தமிழர் பேரவையின் சார்பில் 28 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.இதில் சாதி மதத்தை கடந்து இஸ்லாமிய கிறிஸ்தவ பெண்கள் ஒரே இடத்தில் 101 பொங்கல் பானை வைத்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான தப்பாட்டம் முழங்கு ஆண்களும் பெண்களும் புத்தாடைகள் அணிந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை சப்தமிட்டு பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டனர்.இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.