கத்தி சண்டை போட்ட நண்பர்கள்: ஒருவர் சாவு, இன்னொருவர் கவலைக்கிடம்!!!

திண்டுக்கல் மதுரை சாலையில் உள்ள பேகம்பூர் அஸ்நாத் புரத்தைச் சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா. இதே பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் . இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருவரும் நண்பர்கள் என தெரிகிற்து. 


இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இப்ராஹீம் ஷா வின் இருசக்கர வாகனத்தை அன்வர் எரித்து விட்டதாக தெரிகிரது.


அதற்கு பணம் கேட்டு அன்வர் ஷாவிடம் இப்ராஹிம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில்   இன்று இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி  இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.


பின்னர் இருவரும் கத்தி சண்டை போட்டு மாறி மாறி ககத்தியால் குத்திக் கொண்டனர்.இதில் காயமடைந்த அன்வர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இப்ராஹிம்  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்   சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.