அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காலண்டர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது

சீர்காழி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு காலண்டர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது
சீர்காழி நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2020 ஆங்கில  புத்தாண்டை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு காலண்டர் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக சீர்காழி நகர கழக செயலாளர் ஏ.கே.சுரேஷ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு காலண்டர்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சீர்காழி ஒன்றிய கழக செயலாளர் கு.பொற்செழியன், சீர்காழி நகர அவை தலைவர் எம்.பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் கே.குமார், நகர பொருளாளர் ஏ.அமீர்ஜான், நாகை வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் பொன்.பாலு, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் முகமது யாசின், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் ஆனந்த், நகர 6-வது வார்டு செயலாளர் குருவப்பன், நகர இளைஞர் அணி துணை செயலாளர் பிரசாந்த், இணை செயலாளர் முகமது அசாருதீன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செந்தில் குமார், அம்மா பேரவை செயலாளர் எம்.சூர்யா, தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் எம்.ஏ.அருண் பாலாஜி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜா முகமது, நகர தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் ரா.ராஜதுரை, சீர்காழி நகர 20-வது வார்டு செயலாளர் தினேஷ், 24-வது வார்டு செயலாளர் துரைசிங்கம், மாணவர் அணி கார்த்திக், 19-வது வார்டு செயலாளர் ராஜா, நகர அம்மா பேரவை துணை செயலாளர் மணி, 10-வது வார்டு செயலாளர் கணேஷ், நகர இளைஞரணி செயலாளர் சரவணன், ஆர்.ராதாகிருஷ்ணன், நகர வார்டு செயலாளர்கள் கே.ராஜந்திரன், முகமது அலி ஜின்னா, வெப்பரசன், ராமு, சரவணன், கண்ணன், தனசேகரன், மகளிர் அணி கௌசல்யா, நகர வர்த்தக அணி தலைவர் வி.கார்த்திக், அம்மா பேரவை துணை செயலாளர் ஜி.ஸ்ரீதர், எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை தலைவர் அருண்பிரசாத், மாவட்ட மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் குருராஜன், நகர அம்மா பேரவை துணை செயலாளர் கமலகண்ணன், இமாம், சுபாஷ், பாண்டியன், அஜீத் மற்றும் அ.ம.மு.க கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.