கலெக்டரையே கட்டை வண்டியில் ஏற்றிய கிராம மக்கள்!!

ஏ.சி., காரில் வரக்கூடிய கலெக்டரை கட்டை வண்டியில் ஏற்றி அழைத்து வந்துள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்கள்.  


திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்து  உள்ளது மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி. இங்கு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


விழாவையொட்டி ஊராட்சி மன்றத்தலைவர்  பொ.நிலவழகி பொய்யாமொழி தலைமையில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.  இங்குள்ள பெருமாள் திருக்கோவில் வளாகத்தில்  பொதுமக்கள் திரண்டு தமிழர் பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர். 


 இந்த  பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பங்கேற்றார். அவரை அந்த ஊர் பொதுமக்கள் அலங்கரிக்கப்பட்ட கட்டை வண்டியில் ஊர்வலமாக வருமாறு அழைத்தனர்.


கலெக்டர் கந்தசாமியும் பொதுமக்களின் அன்பான  வேண்டுகோளுக்கு இணங்க கட்டை வண்டியில் ஏறி நின்று கொண்டே பயணித்தார். பெருமாள் கோவில் வளாகம் வரை கட்டை வண்டியில் வந்த கலெக்டர் அங்கு பொதுமக்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார். 


மக்களின் அன்பு அழைப்பை ஏற்று கட்டை வண்டியில் வந்த கலெக்டருக்கு பாராட்டு குவிகிறது.