மொடக்குறிச்சி அருகே மாணவியை வெட்டிய வாலிபர் போலீஸ் விசாரணை.


மொடக்குறிச்சி அருகே மாணவியை வெட்டிய வாலிபர் போலீஸ் விசாரணை.

 

மொடக்குறிச்சி அருகே உள்ள பட்டறை வேலம் பாளையத்தில்  14 வயது மிக்க மாணவி ஒருவர் குழாயடியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த சுமார் 30 வயது மிக்க வாலிபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்து முகம் போன்ற பகுதிகளில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.