காலிங்கராயன் கால்வாய்க்கு பொங்கல் பூஜை: நடிகர் கார்த்தி பங்கேற்பு

நீரின்றி அமையாது உலகு 
என்னும் பொய்யா மொழிக்கேற்ப  700 ஆண்டுகளுக்கு முன்பு காலிங்கராயன் மன்னரால் சுமார் 12 ஆண்டுகள் முயற்சி மேற்கொண்டு உழைத்து வெட்டப்பட்ட கால்வாய் தான் காலிங்கராயன்் கால்வாய்.


இன்றும் நமது கொங்கு மண்டல பகுதியை பொன்விளையும் பூமியாக செய்து வரும் காலிங்கராயன் கால்வாய் நீர்..


கடந்த 40 வருடங்களில் மிக மோசமாக மாசுபட்டதை தடுக்கவும் பொது மக்களிடையே அதன் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்...


 நம்மை வளம் பெறச் செய்யும் காலிங்கராயனின் அழிவை பொம்மையாக இருந்து அனுதினமும் பார்த்து நிற்காமல் செம்மைப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகவும் ...


விவசாய பெருமக்கள் பலர் ஒன்றுகூடி பல வகை நிகழ்வுகளை செய்து வருகிறார்கள் ..


அதன் வகையில் ..


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கிளாம்பாடி பேரூராட்சி சொக்கநாச்சி அம்மன் கோயில் அருகில் வரும் காலிங்கராயன் கால்வாய்க்கு ...


கிளாம்பாடியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று கூடி இன்று (தை 1 ) 15.1.2020 கால்வாய்க்கு பூஜைகள் செய்து காலிங்கராயருக்கு மரியதை செலுத்தப்பட்டது.


கால்வாய் மாசை தடுத்து அடுத்த ஐந்து வருடத்தில் அள்ளிப் பருகும் அற்புத குடிநீராக கால்வாய் நீர் செல்ல நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.


நிகழ்வுக்கு பல பகுதியிலிருந்து விவசாய பெருமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்தனர்.


நிகழ்வில் திரைப்பட நடிகர் கார்த்தி அவர்கள் கலந்து கொண்டு நீரின் அருமைகளை அற்புதமாக எடுத்துக் கூறி 


காலிங்கராயன் கால்வாய் மாசை தடுக்க போராடும் உங்களுக்கு என்னுடைய பணிவான நன்றிகள் என்று கூறிச் சென்றார்.