வேட்டி சேலையில் வந்த போலீஸ்: பயபக்தியுடன் பூஜை செய்த டி.எஸ்.பி., : இது போலீஸ் பொங்கல்!!
பழனி நகர் காவல் நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தில் போலீசார் வேட்டி, சேலையில் பங்கேற்றனர். இதில் போலீஸ் டி.எஸ்.பி., பூஜை செய்து பொங்கல் விழாவை சிறப்பித்தார்.

தமிழனின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பழனி நகர காவல் நிலையத்தில் மாட்டுப் பொங்கல்  விழா நடைபெற்றது.

பழனி நகர் காவல் நிலையத்தில் போலீசார் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை போலீஸ்  நிலையத்தில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இதில் பழனி  சரக  போலீஸ் டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமை தாங்கி பொங்கலுக்கு பூஜை செய்து அனைவருக்கும் வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ரஞ்சித், பஞ்சலட்சுமி மற்றும் போலீசார்  தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து விழாவை சந்தோஷமாக கொண்டாடி வாழ்த்துக்களைப் பரிமாறிக்  கொண்டனர்.

பொங்கல் பண்டிகை காரணமாக பழனி போலீஸ் நிலையம் உற்சாகமாக காணப்பட்டது. பொங்கல் கொண்டாடிய போலீசாருக்கும், எளிமையாய் விழாவில் பங்கேற்ற டி.எஸ்.பி.,க்கும் பழனி நகர மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர்.