திருப்பூரில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா: திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்பு !!!       திருப்பூர் காந்தி நகர்  ஏ.வி.பி., லேஅவுட் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு பொங்கல் மற்றும் விளையாட்டு விழா  நடைபெற்றது.


போட்டியில் சிறு பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர்  மாலையில் நடந்த பரிசளிப்பு விழா குடியிருப்போர் நல சங்க தலைவர். துரை தலைமையில் நடைபெற்றது


விழாவில் திருப்பூர் முன்னாள் மேயர் க.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.


மேலும் விழாவில் டாக்டர் மரகதம் சாமிநாதன்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் R.ஈஸ்வரன்.திருப்பூர் மாவட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் செயலர் வெள்ளியங்கிரி மற்றும் வக்கீல்  S.லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவாக செம்பருத்தி இசை குழுவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பொருளாளர் பழனிச்சாமி நன்றி கூறினார்.


காலை முதல் மாலை வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் செயளாலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது அடுத்த நிகழ்வாக AVP.லேஅவுட் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்படும்