ஈரோடு ஜல்லிக்கட்டில் பாய்ந்து வந்த காளைகள்: பக்குவமாக பிடித்த வீரர்கள்!!!

 


ஈரோட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அமைச்சர்கள் கே. ஏ.எஸ். செங்கோட்டையன்,  , கே.சி.கருப்பண்ணன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 300 காளைகளை 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் உள்ளனர்.


இரண்டாவது ஆண்டாக ஈரோடு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. 


இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.எஸ். செங்கோட்டையன், அமைச்சர் தங்கமணி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜா என்கிற ராஜா கிருஷ்ணன் உள்ளிட்டவர்்கள. போட்டிகளை தொடங்கி வைத்தனர்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் முதல் சாமி மாட்டுக்கு பூஜை செய்தும் மாடுபிடி வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக விடப்பட்டது. அதனை மாடுபிடி வீரர்கள்  பாய்ந்து பிடித்து மாடுகளை அடக்கினர்.


 ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்று ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


 


Previous Post Next Post