இது குலாலர் பொங்கல்!!

சேலம் மாவட்டத்தில் குலாலர் இளைஞர் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் அருகே அமைந்துள்ள குலாலர் இளைஞர் சங்கம் சார்பாக தைப்பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கல் விழாவாக சிறப்பாக நடைபெற்றது.


இன்று காலை சரியாக பத்து மணி அளவில் நமது நீலாயதாட்சி அம்மன் மாதர் சங்கம் இணைந்து பொங்கல் வைத்து விழா கொண்டாடினர்.


இதில் தலைவர் சவுந்தர்ராஜன், உதவித் தலைவர் பாபு, பொருளாளர் பழனிச்சாமி, உதவி செயலாளர் வீ கார்த்தி அவர்களின் தலைமையில் தை பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


இன்று மாலை 5 மணி அளவில் சங்கத்தின் சார்பாக இன்னிசை கச்சேரி பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் சிஷ்யை திருமதி பாலாம்பாள் அவர்கள் குழுவினரால் மாபெரும் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது.