வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள்  முற்றுகையிட்டு போராட்டம்

வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள்  முற்றுகையிட்டு போராட்டம் 

 


 

கடலூர் மாவட்டம்  வேப்பூர் கிராம பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டம்,  வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்  தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்   தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என  சான்றிதழ் வாங்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் ஆகவே,  அவருடைய வெற்றியை ரத்துசெய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது

மேலும்  அவருக்கு போலியாக சாதி சான்றிதழ் வழங்கிய வேப்பூர் வட்டாட்சியர்  அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தபட்டது 

 


 

வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை வலியுறுத்தபட்டது போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் வேப்பூர் உதவி ஆய்வாளர் பாக்யராஜ்   பேச்சுவார்த்தை நடத்தியும்  சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும்,  இரண்டு மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அலுவலகத்தில்  இருந்து வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் விரக்தி அடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே சென்று வட்டாட்சியரிடம் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்க சென்றனர்.

 

 

 பின்னர் அங்கு வந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் , வட்டாட்சியர் கமலா  ஆகியோர்  பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில் விசிக அர்சுணன், சக்திவேல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விடுதலை வளவன், கிராமத்தின் சார்பில்  தமிழ்செல்வன், பாக்யராஜ், சங்கர், சிவகுமர், சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.