கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேர் திருவிழா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேர் திருவிழா நடைபெற்றது.

 திருத்தேரை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். இதில் சிட்கோ முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், ஆவின் தலைவர் காளியப்பன் , ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், மனோகரன்,உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.