பழனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
பழனியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 


 

பழனியில்  மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன், மற்றும் செல்வியை கண்டித்து மயில் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனியிலிருந்து ஆயக்குடி வழியாக  வரதாபட்டினம் வரை கிட்டத்தட்ட 11 கிலோ மீட்டர் உள்ளடக்கிய பகுதியாகும். இந்தப் பகுதிகளுக்கு மினிபஸ் வழித்தடம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வழங்கியுள்ளார். ஆனால் இந்தப் பகுதியில் செல்லும் சிற்றுந்து ஓட்டுநர்கள் பழனி முதல் ஆயக்குடி வரை மட்டுமே செல்கின்றனர். வரதாபட்டினத்திற்கு எந்த மினிபஸ்சும் செல்வதில்லை இதனால் வரதாபட்டினத்துக்கு செல்லும் மக்கள் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்த செய்தியை சார் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

 

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட செய்தியை கொண்டு செல்கிறேன் என்று சார் ஆட்சியர் உறுதியளித்தார். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலர் இதுவரை எந்த ஒரு சிற்றுந்துகளையும் பரிசோதனை செய்யவில்லை. கேட்டால் அதிகாரத்துடன் ஆணவ பேச்சுக்கள் பேசி வருகிறார் எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பாக ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று கூறினர். இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயை ஜபார்,நகர செயலாளர் பெஸ்ட்மோகன், தொகுதி பொறுப்பாளர் வினோத்,சிவாஹாசன்,கோபிஹாசன்,ரபீக்ராஜா, உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.