மக்களே உங்களுக்கு துணையாக இருக்கிறேன்... ஈரான் படைத்தளபதியை போட்டு தள்ளிவிட்டு வசனம் பேசுகிறார் டிரம்ப்

 


உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரானின் செயலை கண்டித்து ஈரானில் அரசின் செயலை கண்டித்து போராட்டங்கள் டெஹ்ரான், ஷிராஸ், எஸ்ஃபஹான், உருமியே போன்ற நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் பதற்றம் நிலவுகிறது. உள்நாட்டில் கலவரத்தை தூண்டியதாக இங்கிலாந்து தூதர் ராப் மெக்கைர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்


இந்நிலையில் ஈரான் புரட்சி படை தளபதி சுலைமான் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே பதற்றம் நிலவும் நிலையில் ஈரான் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்


இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரானில் நடைபெறும் மக்களின் தொடர் போராட்டங்களின் கள நிலவரங்கள் குறித்து மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். 


ஈரானில் இணையம் துண்டிக்கப்படுவதையும் , அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதையும் நாங்கள் மீண்டும் பார்த்து கொண்டிருக்க மாட்டோம். உலகம் உங்களை பார்த்து கொண்டிருக்கிறது.


ஈரானில் துன்பப்படும் தைரியமான மக்களே. நான் பதவி ஏற்றது முதல் உங்களுக்கு துணையாக நிற்கிறேன். எனது அரசும் உங்களுக்கு துணை நிற்கும். நாங்கள் உங்கள் போராட்டத்தை மிக நெருக்கமாக கண்காணித்து வருகிறேன். உங்களது தைரியத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.