ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிவைப்பு!


தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

 


 

ஈரோடு மாவட்டம்  தூக்கநாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் காலை 11மணிக்கு துவங்கப்பட்டு வேட்புமனு வழங்கப்பட்டது. தேர்தல் வாக்கு சீட்டுகள் தயார் செய்து ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் போது 1வது வார்டு உறுப்பினர் கே. வி. நட்ராஜ் என்பவர் பத்து  எண்ணிக்கையிலான வாக்கு சீட்டுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் கையிலிருந்து பிடுங்கி, கிழித்து வாக்கு பெட்டியை எடுத்து செல்ல முயன்றதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் முற்பகல் நடக்க இருந்த ஒன்றிய குழு தலைவர் தேர்தல், பிற்பகல் நடக்க  இருந்த துணை தலைவர் தேர்தல் இரண்டும் தேதி அறிவிக்க படாமல் தள்ளி வைக்க பட்டது.
 


 

 
 

Attachments area